முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- காஷ்மீரில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக வாகனத்தில் சென்ற   சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது  தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த வீரர்களுக்கு ராமேசுவரம்  அக்னி தீர்த்த கடலில் ராமேசுவரம் யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில்  நேற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டனர்.
 காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நேற்றுக்கு முன் தினம்  சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  பயங்கரவாதி இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படை ஒருவர் காரில்  வெடிகுண்டுகளுடன்   சி ஆர் பி எப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மீது மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து உயிரிழந்த வீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு புனித தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில்  ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்,செயலாளர் காளிதாஸ்   முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்று்ம் புரோகிதரக்ள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து