அம்மாவின் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் அதன் அன்பை தமிழக மக்கள் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
21 dgladmk

திண்டுக்கல்,- அம்மாவி;ன் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் அதன் அன்பை தமிழக மக்கள் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதிபட பேசினார்.
திண்டுக்கல் மண்டலம் சார்பில் மாவட்ட கழக புரட்சித் தலைவி அம்மா போவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தி;ண்டுக்கல் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் வரவேற்றார். தேனி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத் குமார், கரூர் மாவட்ட செயலாளர் காமராஜ். திருச்சி மாவட்ட பேரவை செயலாளர் கிருஸ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளர் அழகு மருதராஜ், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி பரமசிவம், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன்,  தேனி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் பேசுகையில் எந்த கட்சி கூட்டம் ஆனாலும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை கூட்டம் என்றாலே அது மாநாடு தான். கழகத்தின்  கொள்கையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்வதில் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் அதன் வரிசையில் வருகின்ற எந்த தேர்தல் ஆகட்டும் கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பதே நமது கடமை என்ற உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. அம்மா சொல்வதை போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. துரோகிகள் தான் உள்ளனர் அவர்களை விரட்டி விரட்டி அடிக்கும் பணியை பேரவை நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்று பேசினார்.
கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விசுவநாதன் பேசுகையில் மாநில பேரவை செயலாளர் உதயகுமார் திறம்பட செயலாற்றி வருகின்றார் கழகத்தின் கொள்கையும் கட்சியின் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டு செல்வதில் திறம்பட பணியாற்றி வருகின்றார் .மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை கூட்டம் என்றாலே எழுச்சி இருக்கும். அமைச்சர் உதயகுமார் மாணவரணி செயலாளராக திறம்பட பணியாற்றியதால் புரட்சித்தலைவி அம்மா கழக இளைஞரணி செயலாளராக அமர வைத்தார். அதிலும் முத்தாய்ப்பாக திறம்பட செயலாற்றினார்.அவரது திறமை முழுவதுமாக கழகத்திற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே கழக அம்மா பேரவை செயலாளராக புரட்சித்தலைவி அம்மா அமரவைத்தார். மாநில பேரவை செயலாளராக உதயகுமார் நியமித்தது முதல் பேரவை நிர்வாகிகளை அவர் திறம்பட வழிநடத்தி சிறப்பாக செயல்படுகின்றார். கழக ஆட்சியை குறை சொல்ல யாருக்கும் தகுதியும் கிடையாது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்யையும்இ புரட்சித்தலைவி அம்மாவையும் விமர்சனம் செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் விமர்சனம் செய்தோடு காணாமல் போய்விட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்இ புரட்சித்தலைவி அம்மா இருக்கும்வரை அவர்களால் முதல்வராக முடியாமல் போனது. கழக தெய்வங்களின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறம்பட ஆட்சி நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா வழிவகுத்த திட்டங்களோடு கூடுதலாகவும் செய்து சாதனை படைத்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அம்மாவிற்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று பேசினார்
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், கடந்த 1972ல் தி.மு.க. எனும் தீய சக்தியை அழிக்க வேண்டும் என்பதற்காகவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தார். பல்வேறு தடைகளை கடந்து இன்று கழகம் ஆலமரம் போல் விருட்சமாக நிற்கின்றது. கருணாநிதி இறந்தவுடன் ஸ்டாலின் முதல்வராக துடிக்கின்றார். தி.மு.க. தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை. கருணாநிதி மறைந்த பின்னர் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துகின்றார். கிராமசபைக் கூட்டம் அவர் தலைமையில் நடக்கின்றது. அவருக்கு பின்னால் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் அமர்ந்துள்ளது வெட்கக்கேடானது. தனது மகன் உதயநிதி மூலம் கூட்டத்தை கூட்டி கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் வழியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். புரட்சி தலைவி அம்மா பொங்கல் பரிசுடன் ரூ.100 வழங்கினார். தற்போது அம்மாவின் அரசு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இத்திட்;டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டாலின் நடத்துகின்ற கூட்டத்தில் தி.மு.க.வினரை வைத்தே நடத்துகின்றார். ஆனால் அதிலும் கூட்டம் இல்லை. மாறாக கழக அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசு வாங்குவதற்காக கூட்டம் அதிக அளவில் உள்ளது. கட்சி பாகுhபடின்றி தி..மு.க. உள்ளிட்ட அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தி.மு.க.வினரே அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே மருமகன் சபரீசன் பேச்சைக் கேட்டு கிராமசபைக் கூட்டம் நடத்தி வருகிறார். மக்கள் அவரை நம்ப வில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும், இடைத் தேர்தல் ஆகட்டும் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கழகமே மகத்தான வெற்றியை பெறும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் வழியில் அவர் கொண்டு வந்த திட்டங்களோடு, கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக திட்டம் தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மக்களின் அன்பு பெருகி வருகிறது. வருகிற தேர்தலில் தமிழக மக்கள் அதனை வெளிக்காட்டுவார்கள். கட்சியையும் ஆட்சியையும் தோற்கடிப்பதற்கு ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பேராதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி திருச்சி மாநகர். புறநகர், கருர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பேரவை நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.                                                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து