முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புனே : 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் மீட்பு

மராட்டிய மாநிலம் புனேவின் தோராங்தாலே கிராமத்தில் நேற்று முன்தினம்  மாலையில் 6 வயது சிறுவன் ரவி பண்டிட் ,200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். சிறுவனின் தந்தை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் அப்பகுதியில் விளையாடியுள்ளான். அப்போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்தனர். ஆய்வு செய்த போது சிறுவன் 10 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. உடனடியாக மீட்பு பணியை வீரர்கள் தீவிரப்படுத்தினர். 16 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து