முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : காஷ்மீரில் 40 பேர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

40 வீரர்கள்...

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

நியாயமானதுதான்...

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மசூத் அசார் தான் காரணகர்த்தா என்று  பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்  குற்றம் சாட்டினார். மசூத் அசாரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறிய முஷாரப், தம்மை கொல்லவும் அவன் திட்டம் தீட்டியதாக நினைவு கூர்ந்தார்.

உத்தரவிடவில்லை...

வீரர்கள் உயிரிழப்பு குறித்து அவர் கண்டனத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்த தாக்குதலுக்கு இம்ரான் கான் உத்தரவிடவில்லை என பாகிஸ்தான் அரசுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து