முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க கூட்டணி ஒரு கலவரக் கூட்டணி: இயற்கையாக அமைந்த அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. இலை, பூ, பழம் என அனைத்தும் இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால், திமுகவில் கொதிக்கும் சூரியன், வெட்டப்பட்ட கை, பம்பரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள ஒரு கலவரக் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

சரக்கு ரயில் முனையம்....

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நெல்லூரில் இருந்து காணொலி காட்சி மூலம் நெல்லூர் - சென்னை பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதேபோல் சென்னையில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 1.42 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நடை மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, ’தமிழகத்தில் குறிப்பாக சரக்கு ரயில் முனையம் திருவொற்றியூரில் அமைக்க வேண்டும்’ என்றார்.

ரூ.16 ஆயிரம் கோடியில்...

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’தென்சென்னையை போல வடசென்னையும் வளர்ச்சி அடைய 16,000 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இரும்பு மற்றும் நிலக்கிரி கையாளுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, 160 கோடி ரூபாய் பாதை போடப்பட்டுள்ளது எனவும் இது முழுமை பெறும் போது வடசென்னையில் போக்குவரத்து முற்றிலுமாக சீராகும் எனவும் கூறினார்.2,600 கோடி ரூபாய் மதிப்பில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான 2-வது மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க இருக்கிறது.

சிறந்த மாவட்டமாக...

தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போன்று வடசென்னை அனைத்து வசதிகளை பெற்று அனைத்து வளங்களும் பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ’5 வருடத்தில் வட சென்னை எல்லா கட்டமைப்பு கொண்ட சிறந்த மாவட்டமாக வளர்ந்து விடும் என்றும், இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் வட சென்னைக்கு கிடைத்துள்ள ஒரு வர பிரசாதம் என்று கூறினார்.மேலும் ஒரு காலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தமிழகத்தில் வருமா, சாத்தியமா என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். ஆனால் தற்போது அந்த கனவு நனவாகி உள்ளது. அதேபோன்று படிப்படியாக அனைத்து திட்டங்களையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்றார்.

வலுவிழந்துள்ளது...

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. இலை, பூ, பழம் என அனைத்தும் இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால், திமுகவில் கொதிக்கும் சூரியன், வெட்டப்பட்ட கை, பம்பரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள ஒரு கலவரக் கூட்டணி. எனவே இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி தி.மு.க.வை காட்டிலும் கூட்டணி மற்றும் தேர்தல் பணியில் விவகாரத்தில் அ.தி.மு.க. ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, தி.மு.க. வலுவிழந்து  உள்ளதால் தான் காங் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து