முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.கிற்கு தடை விதிக்க பி.சி.சி.ஐ வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த உள்ளது.

இந்தியா குற்றச்சாட்டு...

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்தார். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

வீரர்கள் எதிர்ப்பு...

புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று முன்னாள் கேப்டன் அசாருதீன், ஹர்பஜன்சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். மற்றொரு முன்னாள் கேப்டனான கங்குலி “பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

விலகப்போவதாக...

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது. அப்படி தடை விதிக்காவிட்டால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுக்கும்.

நிபுணர்களுடன் ஆலோசனை

இது தொடர்பான கடிதத்தை பி.சி.சி.ஐ.யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகி தயாரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராயன் ஒப்புதலின் பேரில் இந்த கடிதம் தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு செய்கிறது. அதன்பிறகு இந்த கடிதம் ஐ.சி.சி.க்கு அனுப்பப்படும். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. வினோத்ராய் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ம் தேதி மான் செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து