முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டை மட்டும் அல்ல; பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்பையும் கைவிட வேண்டும் - சவுரவ் கங்குலி காட்டம்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து விளையாட்டை மட்டும் அல்ல; பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டுமென இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

கடும் கண்டனங்கள்...

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்ததுடன் பல நாடுகளும் கூட இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தன.

வருந்தத்தக்கது...

தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதல் உண்மையில் வருந்தத்தக்கது.  மிக மோசம் வாய்ந்த இந்த விசயம் ஒருபொழுதும் நடக்க கூடாத ஒன்று.  இதனால் இந்திய மக்களிடம் இருந்து வரும் எதிர்வினை எதுவும் சரியானதே என கூறினார்.

நடக்க வாய்ப்பு இல்லை...

10 அணிகள் கலந்து கொள்ளும் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் விளையாட வேண்டும். உலக கோப்பையில் ஒரு போட்டியில் இந்தியா விளையாடாவிட்டால் அது ஒன்றும் பெரிய விவகாரம் ஆகப்போவது இல்லை என நான் உணர்கிறேன் என கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் இரு நாடுகளுக்கும் இடையே எந்த இருதரப்பு தொடர்களும் நடக்க வாய்ப்பு இல்லை.  உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என கேட்டு கொள்ளும் இந்திய மக்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  கிரிக்கெட், கால்பந்து அல்லது ஹாக்கி போட்டிகள் விளையாடுவதனை நிறுத்துவதுடன் இல்லாமல் பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்.

விளையாட வேண்டாம்...

இந்த விவகாரத்தில் அரசு வலிமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நான் உணர்கிறேன்.  இந்த தாக்குதலுக்கு பின் எடுக்கும் பதில் நடவடிக்கை இந்தியாவிடம் இருந்து வலிமையான ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட வேண்டாம் என ஹர்பஜன் சிங்கும் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து