முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் சிவகங்கையில் காவல் துறையினருக்கு 201 வீடுகள்: முதல்வர் அடிக்கல்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ், சிவகங்கையில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

திருப்பூர் மாநகரத்தில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் - மங்கலத்தில் 69 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் - அம்மையநாயக்கனூரில் 3 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம் - ஜெயங்கொண்டம், சென்னை மாநகர் - திருநின்றவூர் மற்றும் பல்லாவரம், மதுரை மாநகர் - ஜெய்ஹிந்த்புரம், விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில், மொத்தம் 5 கோடியே 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையக் கட்டிடங்கள்,

மதுரை மாநகரில் ஒரு கோடியே 63 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை சரக குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டிடம், வேலூர் மாவட்டம் - ஆம்பூரில் 96 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் என மொத்தம் 16 கோடியே 6 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி. பழனிசாமி திறந்து வைத்தார்.

உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ், சீருடை பணியாளர்களுக்காக சிவகங்கை வட்டம், பையூர்பிள்ளைவயல் கிராமத்தில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் 29,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எழுத்து தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 234 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் கே.பி. மகேந்திரன், காவல் துறை இயக்குநர் (தொழில்நுட்ப பணிகள்) தமிழ் செல்வன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மஞ்சுநாதா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து