முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் இணைந்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை: மதுரையில் தமிழிசை பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிக பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மங்களகரமான கூட்டணி.

தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. ம.திமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார். தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர். 28-ம் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழகத்தில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து