முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

திருவாரூர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது. மணமக்களுக்கு தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.

அமைச்சர் காமராஜ்...

ஜெயலலிதாவின் நல்லாசியுடன் மணமக்கள் இருமணம் அன்பால் ஒருமணமாகி பலலாண்டு காலம் வாழ வேண்டும் என அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால், தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழக அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன்,இரா துரைக்கண்ணு,வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

70 வகை சீர்வரிசை...

மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப் புடவை, வேட்டி உட்பட 70 வகையான திருமண சீர்வரிசை பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் வரவேற்றார். இறுதியில் திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறினார். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள்,பொதுமக்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.

இந்த கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

அ.தி.மு.க. அழிந்து விடும் என்று தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று கூறினார்களோ அன்று முதல் அ.தி.மு.க. ஆலமரம் போல் வளர்ந்து பலம் கூடி கொண்டே இருக்கிறது.பிரதமர் மோடி தனது பாக்கெட்டில் இருப்பது போல் நினைத்து கொண்ட தினகரனுக்கு அ.தி.மு.க.வுடன் மோடி கூட்டணி வைத்ததால் தினகரன் இப்பொழுது இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. 40 எம்.பிகளும், இடைத்தேர்தலில் 21 தொகுதியும் வெற்றி பெறுவது உறுதி. இந்த கூட்டணி ஏற்பட்டவுடன் பொதுமக்களிடம் அ.தி.மு.வினரின் மரியாதை கூடிகொண்டே இருக்கிறது. இவ்வா£று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து