முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தான் துப்பாக்கிசுடுதல் அணிக்கு விசா வழங்க இந்தியா மறுத்ததால், இந்தியா மீது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

விளக்கம் அளிக்க...

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து,  பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க இந்தியா அனுமதி மறுத்தது. இந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிகமாக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா உரிய விளக்கம் தரவும் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாது எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.அதேபோல், 25 மீட்டர் ரேபிட் ஃபைர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஒலிம்பிக் தகுதியையும் ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து