முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா -பாக். இடையேயான பகைமை தீர வேண்டும்: டிரம்ப்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : புல்வாமா தாக்குதலுக்கு பிறகான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பகைமை நிற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு தற்போது மிக மிக மோசமாக உள்ளது. மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இந்த பகைமை நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவை நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

நடைபெற்ற இந்த சம்பவத்தால், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தான் நமக்கு எப்படி உதவ வேண்டுமோ? அவ்வாறு செயல்படாததால், அந்நாட்டிற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தினேன். பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு கடந்த சில மாதங்களாக நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து