முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து கொல்கத்தா பத்திரிக்கை புகைப்படம் வெளியீடு

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? என கிண்டலடித்து கொல்கத்தா பத்திரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 14-ம் தேதி பிற்பகல் 3.10 மணியளவில் பயங்கரவாத தாக்குதல் புல்வாமாவில் நடைபெற்றது. ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய சுய விளம்பரத்திற்காக ஆவணப்பட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இயங்கி வரும் தி டெலிகிராப் என்ற பத்திரிக்கை மோடியை விமர்சித்து தனது முதல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்டி இந்தியர்களே உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என நீங்கள் எவ்வாறு கூறலாம். பிப்ரவரி 14 முதல் தினமும் பிரதமர் மோடி கருப்பு நிறமுள்ள உடைகளையே அணிந்து வருகிறார் என கிண்டலடித்து உள்ளது. அதற்கு கீழே பிரதமர் மோடி, அதன் பின் பங்கேற்ற விழாக்களில் சிரித்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் 15-ம் தேதி பிரதமர் அதிவேக ரயிலை தொடங்கி வைத்த விழாவிலிருந்து, கொரியாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வரை பிரதமர் மோடி சிரித்தவாறு இருக்கும் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை சிறப்பு கட்டுரையாகவும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது . இந்த விவகாரத்தில் அந்த பத்திரிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் எழுந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து