முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபியில் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாடு - கவுரவ பார்வையாளராக சுஷ்மா பங்கேற்பு

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அபுதாபியில் மார்ச் 1,2 தேதிகளில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பையேற்று சுஷ்மா சுவராஜ் அதில் கலந்து கொள்கிறார்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் 46-வது மாநாடு மார்ச் 1 மற்றும் 2-ம் தேதிகளில் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் கூடி சில முக்கிய ஆலோனைகளை நடத்தவுள்ளனர்.

இந்த மாநாட்டில் கவுரவ பார்வையாளராக பங்கேற்க வருமாறு முதன்முதலாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 1.85 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கும், இஸ்லாமிய உலகத்துக்கு இந்தியா அளித்துவரும் பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அனுப்பப்பட்டுள்ள இந்த அழைப்பு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து