முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறு, குறு விவசாய குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் துவக்கி...

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேளாண்மையில் இரு மடங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு மும்மடங்கு வருமானம் என்னும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு,வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, பல்வேறு கொள்கைகளை வகுத்து மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம் பிரதமரால் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூரில் 24.2.2019 அன்று துவக்கப்பட உள்ளது.

3 தவணைகளாக..

அதேசமயத்தில், தமிழ்நாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் மாநில அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம்  இன்று துவக்கி வைக்கப்பட உள்ளது. விவசாயிகள், பயிர் சாகுபடிக்குதேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து, அதிக விளைச்சல் பெற்று, பண்ணை வருவாயை உயர்த்த உதவியாக ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) வரையிலான சாகுபடி நிலங்களை உடைய தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் 6,000 ரூபாய் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

சிறப்புக் கூட்டம்...

முதல் தவணைத் தொகையாக தகுதியுள்ள ஒவ்வொரு சிறு, குறு விவசாய குடும்பத்திற்கும் ரூ.2,000 வீதம் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் தலைமையில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்ட விளக்க சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர், வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். விழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் நுட்ப கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து