முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6.45 கோடி செலவில் 6 மாவட்டங்களில் தொழிலாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்தார்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் பெரம்பலூர், சேலம், விழுப்புரம், ஈரோடு, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டிடம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அறிவிப்பு...

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் மாவட்ட அளவில் தொழிலாளர் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வலுவலகங்களுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வருவதால் மாவட்டந்தோறும் போதுமான உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய சொந்த கட்டிடம் கட்டுதல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும் என்று அம்மா 13.5.2013 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

விருதுநகர் - கரூர்...

அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக, 10,760 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அலுவலகம், தொழிலாளர் அலுவலர் அலுவலகவளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கம்மியர் மோட்டார் வண்டி பிரிவுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடம்; கரூர் மாவட்டம், கரூர்–அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கம்மியர் ஆட்டோ பாடி ரிப்பேர் பிரிவு வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழுப்புரம் - ஈரோடு...

ஈரோடு–அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள்;அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களை திறம்பட நிர்வகித்து கண்காணித்திட, விழுப்புரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலும், சேலத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்கள்; என மொத்தம் 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டிடம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து