முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேஜஸ் விமானத்தில் பறந்த பி.வி. சிந்து

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூருவின் எலஹங்கா விமானப்படை தளத்தில், பாதுகாப்புத் துறை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் கண்காட்சியின் 4-ம் நாளான நேற்று பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. விண்வெளித் துறையில் பெண்களின் சாதனைகள் இடம்பெற்றிருந்தன. மேலும் அனைத்து பெண் பயணிகளும் விமானத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் பறந்தார். பச்சை நிற சீருடை அணிந்து வந்த பி.வி.சிந்து, விமானத்தில் ஏறும்போது பார்வையாளர்களை பார்த்து கையசைத்தார். இளம் வயதில் தேஜஸ் விமானத்தில் துணை விமானியாக பயணித்தது பி.வி.சிந்துதான். முன்னதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கடந்த 3 தினங்களுக்கு முன் தேஜஸ் விமானத்தில் பறந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து