முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடிபுனித நீராடல் - துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவி மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உ.பி.யில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியதுடன், புனித நீராடி கங்கா ஆரத்தி செய்தார்.

உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு, துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புனித நீராடிய அவர், கங்கை ஆற்றுக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து