முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்தில் பலியான மேஜரின் மனைவி ராணுவத்தில் சேர்கிறார்

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : இந்திய - சீன எல்லையில் நடந்த தீ விபத்தில் பலியான ராணுவ மேஜரின் மனைவி தனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.ராணுவத்துக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கவுரி பிரசாத் மகதி, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி அகாடமியில் விரைவில் பயிற்சி எடுக்க உள்ளார்.

ராணுவ மேஜர் பிரசாத் கணேஷ், இந்திய - சீன எல்லையில் பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த எல்லைப் பகுதியில் நடந்த தீ விபத்தில் பிரசாத் கணேஷ் மரணமடைந்தார்.கடந்த 2015-ம் ஆண்டு மும்பை விரார் பகுதியைச் சேர்ந்த கவுரி பிரசாத்தை திருமணம் செய்தார். பிரசாத் கணேஷ் தான் இறப்பதற்கு முன் தனது மனைவி கவுரி பிரசாத் மகதியிடம் நீயும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிவந்துள்ளார்.

ஆனால், கவுரி பிரசாத் மகதி, வழக்கறிஞராகவும் மற்றும் கம்பெனி செகரட்டரியாகவும் பணியாற்றி வந்ததால், தன்னால் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது கணவர் மறைவுக்குப் பின், கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், ராணுவத்துக்கான ஸ்டாஃப் செலக்சன் போர்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்ந்து 49 வாரங்கள் பயிற்சி எடுக்க உள்ளார்.

முதல் முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த கவுரிக்கு 2-வது முறை விதவைக்கான தகுதி அடிப்படையில் பணி கிடைத்துள்ளது. ராணுவத்தில் சேர்வதற்கு முன் அடிப்படை பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால் விரைவில் சென்னைக்கு வர உள்ளார்.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து