முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடைகோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.     

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த சட்டவிதியை மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் அமல்படுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என பா.ஜ.க பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுக்கோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து