முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலிருந்து காய்கறி ஏற்றுமதி நிறுத்தம் - பாகிஸ்தானில் தக்காளி விலை கடும் உயர்வு

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.   

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவனத்தினர் 40 பேர் பலியானார்கள்.இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இருப்பது தெரியவந்தது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியை பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து