முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் இன்று திறப்பு - கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொழிஞ்சாம்பாறை : கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் சதாசிவம் இன்று  திறந்து வைக்கிறார்.  

சினிமா, அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும்.

சிறுவயதில் இங்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு வசித்தார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த வீட்டை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.

இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.

அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது.

இந்த இல்லத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல்படும். இது தவிர பார்க்கிங், எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம், பார்வையாளர்கள் கேலரி, சுகாதார வளாகம் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இல்லத்தின் முன்பு எம்.ஜி.ஆர். உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் ‘சத்திய விலாசம்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை (இன்று)  நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.

கேரள மாநில கலாசார துறை அமைச்சர் பாலன், நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து