முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - வதேராவிடம் ஆவணங்களை 5 நாளில் வழங்க கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது. சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து