முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினோதமான கேட்ச்சால் அவுட்டான ஆஸி. பேட்ஸ்மேன்!

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஹில்டன் கார்ட்ரைட் மிகவும் அரிதாக நிகழக்கூடிய வித்தியாசமான கேட்ச்சால் ஆட்டமிழந்துள்ளார்.

477 ரன்கள்...

ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்ட் ஷீல்டு என்ற உள்ளூர் முதல் தரக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சிட்னியில் நடந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணியும், மேற்கு ஆஸ்திரேலியா அணியும் மோதின. 4 நாட்கள் விளையாடக்கூடிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலியா அணி, 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூ சவுத் வேல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 477 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலியா அணி, 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வித்தியாசமான...

இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் மேற்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹில்டன் கார்ட்ரைட் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார். ஜேசன் சங்கா வீசிய 47-வது ஓவரில் கார்ட்ரைட் அடித்த புல் ஷாட் பந்து மிட் விக்கெட்டில் மிகவும் நெருக்கமாக பீல்டிங் செய்துகொண்டிருந்த நிக் லார்கின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கி மேலே சென்றது.மேலே பறந்த பந்தை பந்துவீச்சாளர் சங்கா கேட்ச் பிடித்தார். உடனே அம்பயரும் அவுட் கொடுக்க அவர், ஹில்டன் கார்ட்ரைட் பரிதாபமாக 3 ரன்னில் வெளியேறினார்.

விதிமுறை மாற்றம்

இந்த கேட்ச் அவுட்டா? இல்லையா? என சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா, இது அவுட் இல்லை என ட்விட்டரில் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஐசிசி விதிமுறைப்படி பீல்டரின் ஹெல்மெட்டில் தாக்கினால் அது ‘டெட் பால்’ என்று அறிவிக்கப்படும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இந்த விதிமுறை மாற்றப்பட்டது. அதனால், ஐசிசி விதிமுறைப்படி இது அவுட் என தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து