முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் ரூ.15 மதிப்பில் தூய்மை ரதம்.

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம், : ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் தனியார் நிறுவனம் சார்பில்  ரூ.15 மதிப்பிலான 3 தூய்மை ரதம் வழங்கப்பட்டது. 
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகயாகும்.இந்த பகுதியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.மேலும் இந்த ஊராட்சிப்பகுதியில் பேக்கரும்பு அருகே மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்  நினைவகமும் உள்ளது.இந்த நினைவகத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகள் வந்த செல்கின்றனர்.இதன் அடிப்படையிலும், அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் நலன் கருதியும் சுகாதாரம் கறுதி தூய்மைப்பணிகள் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நடவடிக்கை எடுத்து வந்தார்.அதன் பேரில் ஹேண்ட் இன் ஹேண்ட் தனியார் நிறுவனம்  சார்பில் தங்கச்சிமடம் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை,மக்காத குப்பை,கழிவு பொருள்களை பிரித்து உரம் தயாரித்தல் பணியாளர்களை நியமித்து தூய்மைப்பணிகளை மேற்கொள்வது,தூய்மை ரதம் வழங்குவது போன்ற திட்டப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வந்தன. அதன் பேரில் முதன் முறையாக தங்கச்சிமடம் பகுதியில் 3 வார்டுகளுக்கு தூய்மைப்பணிகளை மேற்கொள்வதற்காக   ரூ,15 லட்சம் மதிப்பில் மூன்று தூய்மை ரதத்தை  ஹேண்ட் இன் ஹேண்ட் தனியார் நிறுவனம் ஊராட்சிப்பகுதிக்கு நேற்று வழங்கினார்கள்.இந்த ரதம் வழங்கும் நிகழ்ச்சி தங்கச்சிமடம் ஊராட்டசிப்பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மண்டபம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலரும்,தங்கச்சிமடம் ஊராட்சி தனி அலுவலருமான ராஜா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலளர் கதிரேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஹேண்ட் இன் ஹேண்ட்  ஏ.ஜி.எம்.பாபு முன்னிலை வகித்து மூன்று தூய்மை ரதத்தை வழங்கினார். நிகழ்ச்சியில்  தூய்மை ரதத்தை மண்டபம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலரும்,தங்கச்சிமடம் ஊராட்சி தனி அலுவலருமான ராஜா பச்சைக்கொடி அசைத்து தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தங்கச்சிமடம் நுகர்வோர் அறக்கட்ட தலைவர் முருகேசன்,ராமேசுவரம் பசுமை திட்ட நிர்வாகி சரஸ்வதி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளும்,பொதுமக்களும்,மகளிர் அமைப்புகளும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து