முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த வைகோ தேர்தலில் போட்டியிட்டால் திமுகவினரே தோற்கடிப்பார்கள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி  - வைகோ தேர்தலில் போட்டியிட்டால் திமுகவினரே தோற்கடிப்பார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார், .
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர கழகம் சார்பாக நடைபெற்றது ஒன்றிய மாணவரனிசெயலாளர்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார், அப்போது அவர் கூறியதாவது:
.இரட்டை இலை என்று சொன்னாலே அது வெற்றியின் அடையாளம். அமெரிக்கா அதிபராக இருந்தாலும், சிங்கப்பூர் அதிபராக இருந்தாலும் அரபு நாடுகளின் அதிபராக இருந்தாலும் அவர்கள் வெற்றியை இரட்டை விரலை தூக்கிதான் காண்பிப்பார்கள். இரட்டை இலை சின்னம் வெற்றியின் சின்னம். தை பொங்கலுக்கு 2கோடியே 6லட்சம் நபர்களுக்கு பாகுபாடின்றி ஆயிரம் ரூபாய் வழங்கிய தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். ஒரு கோடி பேர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் வைகோவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அதிமுக கூட்டணி தலைவர்களை ஸ்டாலின் விமர்சிக்க தகுதி கிடையாது. 2லட்சம் ஈழத்தமிழர்கள் சாவிற்க்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதிலும் வைகோ போராட்டம் நடத்தினார். ஈழத்தமிழர்கள் சாவிற்கு திமுக, ஸ்டாலின், காங்கிரஸ் என்று தெரு தெருவிற்கு சென்று குற்றச்சாட்டு கூறியவர்தான் தற்போது திமுக கூட்டணியில் உள்ள வைகோ. ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் ஆகக்கூடிய தகுதி கிடையாது என்று கூறியவரும் இந்த வைகோதான்.
திமுகவோடு கூட்டணி வைப்பவன் மானம் உள்ளவன் கிடையாது மானம் உள்ளவன் திமுகவோடு கூட்டணி சேர்க்கவே மாட்டான் என்று நாங்கள் சொல்லவில்லை வைகோதான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மானங்கெட்டவன்தான் திமுகவோடு கூட்டணி வைப்பான் என்று கூறிய வைகோ இன்று திமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன். வேற வழிதெரியாமல் திமுக கூட்டணியில் வைகோ உள்ளார். வைகோவை தோற்கடிக்க திமுகவினரே வேலை பார்ப்பார்கள். அ. திமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் சொந்த கட்சி போன்று அண்ணா திமுககாரன் விசுவாசமாக தேர்தல் பணியாற்றுவான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்திக்கும். திமகவிற்கு வாக்களிக்க யாரும் தயாராக இல்லை. ஸ்டாலினுக்கு ஓட்டுப்போடுங்க என்று வைகோ எப்படி நாக்கு கூசாமல் ஓட்டு கேட்க முடியும். மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்து முன்வாசல் வழியாக வைகோவை அழைத்து சென்ற கட்சி அ. தி.மு.கதான். பம்பரம், மாம்பழம், தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்தது எல்லாமே ஜெயலலிதாவால் தான் நடந்தது. தேமுதிகவிற்கு அங்கிகாரம் கொடுத்தது எங்கள் கட்சிதான். தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை மரியாதை நிமிர்த்தமாகதான் நடைபெற்று வருகின்றது. எங்களிடம் எந்த கட்சியின் நாடகமும் செல்லுபடியாகாது. 46வயது இளைஞன்தான் அ.திமுக. டிடிவிக்கு ஒருவயது, தேமுதிகவிற்கு 10வயது, மதிமுகவிற்கு 14வயது இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் ஓட்டே கிடையாது. எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து