எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : பெங்களூரு டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, டோனியின் அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது
ஆஸி. பீல்டிங்...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
53 ரன்கள்...
தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு ஓவரில் இந்தியா 4 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தது. 4-வது ஓவரில் இந்தியாவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. ஐந்தாவது ஓவரை ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரில் கேஎல் ராகுல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். இதனால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
3 விக்கெட்...
7-வது ஓவரை ஜம்பா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் இந்தியா 8 ரன்கள் சேர்த்தது. 8-வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 61 ரன்கள் எடுத்திருந்தது.
மறுமுனையில் விளையாடிய தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அதிரடி ஆட்டம்...
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். இதனால் 14.1 ஓவரில் இந்தியா 100 ரன்னைத் தொட்டது. அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
15-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரியும், விராட் கோலி ஒரு சிக்சருடன் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 16-வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசினார். ஆடம் ஜம்பா வீசிய 17-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
172 ரன்கள்...
18-வது ஓவரை டி'ஆர்கி ஷார்ட் வீசினார். இந்த ஓவரில் எம்எஸ் டோனி இரண்டு இமாலய சிக்ஸ் விளாசியதோடு, ஒரு பவுண்டரியும் அடித்தார். இதனால் இந்தியாவுக்கு இந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியா 150-ஐ தாண்டியது. 19-வது ஓவரில் விராட் கோலி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது.
190 ரன்கள்...
கடைசி ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் இரண்டு பந்திலும் வைடு மூலம் இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் டோனி ஆட்டமிழந்தார். டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி - டோனி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை விராட் கோலி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி ஓவரில் இந்தியா 18 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
191 ரன்கள் இலக்கு...
விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.