இரட்டை இலை சின்ன தீர்ப்பு - திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
28 dgl news

திண்டுக்கல், - இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்ஞிதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்டெடுத்த வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.விற்கே என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர்ஞிதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை செல்லும் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கே இரட்டை இலை சின்னம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, வார்டு செயலாளர்கள் ராஜ்மோகன், வீரமார்பன், முன்னாள் ஆவின் செயலாளர் திவான்பாட்சா, பேரவை செயலாளர் வி.டி.ராஜன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து