முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் சாதனைகளை மக்களிடத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எடுத்து சொல்ல வேண்டும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வேண்டுகோள்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - பூத் கமிட்டி நிர்வாகிகள் அம்மா அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை வடக்கு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மதுரை கிழக்கு ஒன்றிய  செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார். மதுரை மேற்கு ஒன்றிய  செயலாளர் கே.முருகேசன் முன்னிலை வகித்தார். வண்டியூர் பகுதி செயலாளர் எம்.ஏ.முருகன், திருப்பாலை பகுதி  செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கிழக்கு தொகுதியில் மட்டும் 311 பூத்துகள் உள்ளன. இந்த பூத்துகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். ஆனால் அங்கு கிராம மக்கள் யாரும் இல்லை. இதன் மூலம் அவரின் கிராமசபைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. தற்போது ஜெயலலிதாவின் அரசு அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கியது. அதனைத் தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு 2000 ரூபாய் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த இரண்டு திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். இது போன்ற சாதனை திட்டங்களை நீங்கள் குறிப்பெடுத்து கிராமப்புற மக்களுக்கு எடுத்துரைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியை தேடித் தர வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட பொருளாளர் அம்பலம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் தனம்போஸ்,  இரா.முத்துக்குமார்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் கள்ளந்திரி சேகர், மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் செயலாளர் நிலையூர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்  திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து