முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியரானார் எம்.எஸ். டோனி

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை எம்எஸ் டோனி சாதனைப் படைத்துள்ளார்.

352 சிக்ஸர்கள்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் எம்எஸ் டோனி 23 பந்தில் 40 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் தலா மூன்று பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினார். முதல் சிக்ஸை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 350 சிக்ஸரை பதிவு செய்தார். இதன்மூலம் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 352 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

கெய்ல் முதலிடம்

ரோகித் சர்மா 349 சிக்ஸர்களும், சச்சின் தெண்டுல்கர் 264 சிக்ஸர்களும், யுவராஜ் சிங் 249 சிக்ஸர்களும், சவுரவ் கங்குலி 246 ரன்களும் அடித்துள்ளனர். சர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 2-வது இடத்திலும், மெக்கல்லாம் 3-வது இடத்திலும், எம்எஸ் டோனி 4-வது இடத்திலும், ஜெயசூர்யா 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து