முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதி தொகுதியை வளர்ச்சி பெற செய்வோம்: உ.பி. முதல்வர் உறுதி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

அமேதி, ராகுலின் அமேதி தொகுதியை வளர்ச்சி பெற செய்வோம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதிக்கு பிரதமர் மோடி நாளை 3-ம் தேதி செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமேதிக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராகுல்காந்தியின் தொகுதியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் உறுதிப்பாடு இல்லாததால் அமேதி தொகுதி பல ஆண்டுகளாக பின்தங்கியே உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக இங்கு வளர்ச்சி சக்கரத்தை வேகமாக சுழல விட்டுள்ளோம். விரைவில் அமேதி புத்துயிர் பெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து