முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியின் போது காயம்: இன்றைய போட்டியில் டோனி ஆடுவது சந்தேகம்!

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி, பயிற்சியின் போது காயம் அடைந்தார். இதனால் ஆஸ் திரேலிய அணியுடன் இன்று தொடங்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

பயிற்சியில் தீவிரம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விக்கெட் கீப்பர் டோனியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

வலது முழங்கையில்...

ராகவேந்திரா என்பவர் டோனிக்கு பந்துவீசிக்கொண்டிருந்தார். அவர் அடித்து ஆடியபோது எதிர்பாராதவிதமாக மிஸ் ஆன பந்து, டோனியின் வலது முழங்கையில் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர், பயிற்சியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

இன்று காலை தெரியும்...

டோனி விளையாடாதபட்சத்தில் ரிஷாப் பன்ட், விக்கெட் கீப்பிங் வேலையை கவனிப்பார் எனத் தெரிகிறது. இல்லையென்றால் கே.எல்.ராகுல் கவனிப்பார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இன்று காலை தான் முடிவெடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து