முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியால் உலகக் கோப்பை இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? : விராட் கோலி பதில்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் ஐ.பி.எல். போட்டி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு கேப்டன் விராட் கோலி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

‘த்ரில்’ வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் மீண்டு ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது.

முதல் தோல்வி

இதன்மூலம், ஆஸ்திரேலியாவிடம் 11 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணி. விராட் கோலி கேப்டன்ஷியின் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை (மார்ச்.2) நடைபெற உள்ளது.இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் ஐ.பி.எல். போட்டி எந்தவித மாற்றத்தையையும் ஏற்படுத்தாது என கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

பாதிப்பு இல்லை...

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தாது. உலகக்கோப்பைக்கு ஒரு சிறந்த அணி தேவை. வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டும் தேர்வு செய்ய முடியாது. ஐ.பி.எல். போட்டிக்கு முன்பே உலகக் கோப்பைக்காக சிறந்த இந்திய அணி தேர்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதனால், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்குமுன் நிறைய வீரர்கள், ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஐ.பி.எல். போட்டி மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து