முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த மும்பை பள்ளிச் சிறுவன்!

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அடித்த தனிநபர் அதிகபட்சம் 264 ரன்கள் என்ற உலக சாதனையை மும்பையைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் முறியடித்துள்ளார்.

ரோகித் அதிரடி...

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 173 பந்துகளை எதிர்கொண்டு 264 ரன்கள் குவித்தார். மொத்தம் 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை ரோகித் பறக்கவிட்டார்.

14 வயதுக்கு கீழ்...

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்கள் 264தான். இந்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், இளம் வீரர்களை கண்டறியும் முயற்சியாக மும்மை இந்தியன் அணி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடத்தப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஒன்றில் ரிஸ்வி ஸ்ப்ரிங்ஃபீல்ட் அணிக்காக களமிறங்கிய அபினவ் சிங் என்ற சிறுவன், தனி நபராக 265 ரன்களை விளாசியுள்ளான்.

ட்விட்டரில் பதிவு...

ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த அபினவ் சிங்கின் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ரோகித் சர்மா.. உங்களை விட 264 ரன்களில் அடிப்பதில் சிறந்த வீரர் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து