முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஐ.சி.சி. டி-20 தரவரிசை: டோனி, கோலி, கே.எல்.ராகுல் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : இந்தியா உடனான டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இதனை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா 2-வது இடத்தில்...

அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை முழுவதுமாக இழந்ததால் இந்திய அணி இரண்டு புள்ளிகளை இழந்தது. இருப்பினும், 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று 120 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 135 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். அவர் 4 இடங்கள் முன்னேறி 726 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறார்.

டோனி முன்னேற்றம்

கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 627 புள்ளிகளுடன் 17-வது இடத்தில் இருக்கிறார். மகேந்திர சிங்  7 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 441 புள்ளிகளுடன் 56-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ் 2 இடங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டு 4-வது இடத்தில் உள்ளார். இவர் தவிர, முதல் பத்து இடங்களுக்குள் இந்திய பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து