முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கிறார் கிறிஸ் கெய்ல்

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

கரிபீயன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதான இவர் கடந்த 1999-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். சுமார் 20 வருடமாக சரவதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கெய்ல், சமீப வருடங்களாக டி20 கிரிக்கெட் லீக் போட்டிக்கு முன்னுரிமை அளித்ததால் சர்வதேச போட்டியில் அதிக அளவில் பங்கேற்கவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒருநாள் போட்டியில் விளையாடாத அவர், தற்போது நடைபெற்ற வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

ரன்கள் குவிப்பு...

அப்போது இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் 129 பந்தில் 135 ரன்கள் குவித்தார். 2-வது போட்டியில் 63 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் 97 பந்தில் 162 ரன்கள் குவித்தார். மூன்று போட்டிகளில் 347 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன் கெய்ல் 9672 ரன்கள் அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 10348 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

678 ரன்கள் தேவை

லாரா சாதனையை முறியடிக்க 678 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள், உலகக்கோப்பையில் 9 லீக் ஆட்டங்கள் என வெஸ்ட் இண்டீஸ்க்கு 14 இன்னிங்ஸ் இருந்தன. இதில் 678 ரன்கள் அடித்து லாரா சாதனையை முறியடித்து புதிய மைல்கல் உடன் ஓய்வு பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது 4 போட்டியிலேயே (ஒரு ஆட்டத்தில் விளையாடவில்லை) 347 ரன்கள் குவித்துவிட்டார். இன்னும் 10 போட்டிகளில் 330 ரன்கள் மட்டுமே அடித்தால் சாதனையை முறியடித்து விடலாம். இதனால் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் பிரையன் லாரா முதல் இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து