முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த நியூசிலாந்து

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 715 ரன்கள் எடுத்ததன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

இரட்டைச் சதம்

நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  துவக்க வீரர் ராவல் 132 ரன்களும், லாதம் 161 ரன்களும் குவித்தனர். 3-வது வீரராக களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனும் வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 3வது நாளான நேற்று வில்லியம்சன் இரட்டைச் சதம் (நாட் அவுட்) அடித்து அசத்தினார். 6 விக்கெட் இழப்பிற்கு 715 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

690 ரன்கள் எடுத்தது...

நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு, 2014ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருஇன்னிங்சில் 690 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. மேலும், இப்போட்டியில் துவக்க வீரர்கள் இணைந்து 254 ரன்கள் குவித்ததும் புதிய சாதனை ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து