முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பையை வெல்ல டோனி உதவுவார் - கவாஸ்கர்

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டோனிக்கும், கோலிக்கும் இடையேயுள்ள புரிதல் உலகக்கோப்பை வெல்ல உதவியாக இருக்குமென சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியில் அணிகள்...

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பையை மனதில் கொண்டே இந்தத் தொடருக்கான அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்குமென சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆலோசனை வழங்குவார்...

அதில் டோனியை அணியின் கீப்பராக பெற்றிருப்பது விராட் கோலிக்கு ஆரோக்யமான ஒன்று என்று நினைக்கிறேன். விராட் கோலி தடுமாறும் போதெல்லாம் டோனிஅவருக்கு உதவிகிறார். பீல்டிங்கில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் டோனிஆலோசனை வழங்குகிறார். இக்கட்டான நிலைகளில் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உத்வேகம் கொடுக்கிறார்.

புரிதல் இருக்கிறது...

இக்கட்டான வாழ்வா சாவா என்ற நேரங்களில் டோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. டோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. அவர்கள் பரஸ்பரமாக மதித்துக்கொள்கிறார்கள். இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து