முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பழக்கத்திற்கு அடிமையான ஹாலிவுட் நடிகைக்கு மன நல சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஹாலிவுட் நடிகை அமாண்டா பைன்ஸ். ஆரம்பத்தில் டி.வி. நட்சத்திரமாக வலம் வந்த இவர் பின்னர் ஹாலிவுட் பட உலகில் நுழைந்தார். அமாண்டா பைன்ஸ் நடிப்பில் வெளிவந்த சீ இஸ் த மேன், ஹேர்ஸ்ப்ரே உள்ளிட்ட படங்கள், இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தி அவற்றுக்கு அடிமை ஆனார். மன நல பாதிப்புக்கும் ஆளானார். தற்போது அவர் அங்குள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் மன நல சிகிச்சை பெற்றதாக அமெரிக்க பத்திரிகையான பியூப்பிள் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இவர் மன நல சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில், மறுபடியும் அதே பிரச்சினைகளில் போராடுவதாகவும், அதற்காகத்தான் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து