முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடு இந்தியா - அதிபர் டிரம்ப் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மேரிலேண்ட் புறநகர் பகுதியில் அதிபர் டிரம்ப் கூட்டமொன்றில் பேசினார். அப்போது அவர் கூறும் போது,  இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நாம் ஒரு மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பும் போது அதற்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதே இந்தியாவில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யப்படும் போது நாம் வரி எதுவும் விதிப்பதில்லை. இதனால் நாமும் இனி வரிகளை விதிக்க வேண்டும். ஆனால் 100 சதவீத வரிகளை நான் விதிக்கப் போவதில்லை. 25 சதவீத வரியே விதிக்க போகிறேன். இதற்கு செனட் சபையின் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார்.

நாம் முட்டாள்கள் என அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் நம்மை மதிப்பதில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நமது நாட்டை உலக நாடுகள் மீண்டும் மதிக்கிறது. இதற்கு முன் இல்லாத வகையில் அமெரிக்கா வேகமுடன் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து