முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம்: சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார் - பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் துவக்கி வைக்கிறார்.

அனைத்து இல்லங்களிலும் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கிய அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவினுடைய அரசு. அதே போல, மத்திய அரசு, சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று தவணையாக தலா ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி இந்த ஆண்டு விவசாயிகளுக்கு, கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் வந்து சேர்ந்து விட்டது. இந்த திட்டத்தை சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். இதே திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் துவக்கி வைத்தார். இப்படி மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஏழை தொழிலாளர்கள் நலன் கருதி, ஒரு சிறப்புத் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு ஏழைக் குடும்ப தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை அடுத்து ஏழை தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதனடிப்படையில் இன்று 4-ம் தேதி சென்னையில் அந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி துவக்கி வைக்கிறார். சுமார் 7 முதல் 10 பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் சிறப்பு நிதியுதவியாக ரூ. 2000 செலுத்தி இந்த திட்டம் இன்று முறைப்படி துவக்கி வைக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 60 லட்சம் நபர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைவார்கள். இத்திட்டத்தின்படி ஒருவரது பெயரும் விடுபடாமல், அனைவருக்கும் அந்த தொகை தமிழக அரசால் வழங்கப்படும். அதற்கான விண்ணப்ப மனு அதிகாரிகள் மூலமாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு வங்கிக் கணக்கில் தொழிலாளர்களுக்கு நிதியுதவி செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகிடைத்துள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி அந்த தொகை பல்வேறு தடைகளை மீறி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் இந்த அரசுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். இதே போல் தற்போது ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டமும் தமிழக மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து