முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்போர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த வேம்பு, கரூர் மாவட்டம், முசிறி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரியது வந்த சீனிவாசன் மற்றும் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஆகப் பணிபுரிந்து வந்த இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராகப் பணிபுரியது வந்த  ரவி, நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரியது வந்த சுந்தரேஷ், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த நடராஜன், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரியது வந்த கணேசன், மத்திய சென்னை, திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஆக பணிபுரிந்து வந்த தாமோதரன், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த கோபி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த தங்கப்பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரியது வந்த மோகன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜமோகன், தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரி்ந்து வந்த பாலகுருநாதன், தென்சென்னை மாவட்டம், தென் சென்னை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர்(போக்குவரத்து) ஆக பணிபுரிந்து வந்த எம்.செல்வம், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த சுதாகரன், விருதுநகர் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரியது வந்த சயதணகுமார்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்போராக பணிபுரிந்து வந்த மோகன்தாஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும்
சென்னை புறநகர் திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரியது வந்த ரகுநாதன், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த பிரபாகரன்,  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த முனுசாமி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த ராகவன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த லிங்கராஜ், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த திரவியமோகன், வேலூர் மாவட்டம், ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த பாபு, இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஆக பணிபுரிந்து வந்த மகாலிங்கம், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த வாசுதேவன், வடசென்னை மாவட்டம், வண்ணையம்பதி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த பாபு, சென்னை புறநகர், அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜா, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த குணேயதிரன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த சுதாகர், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரி்ந்து வந்த நம்பிராஜ், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜதுரை, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த ரவி, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து  வந்த ரமேஷ், ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழயதனர் என்ற செய்தியையும் அறியது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த நிலைய அலுவலர், தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்மியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருயது வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து