ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப்போட்டி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கினார்:

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      மதுரை
3 rpu photo

திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவையின் சார்பில் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கோலமிட்ட பொதுமக்களுக்கும் பார்வையாளர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான ஈராண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள அனைத்து பகுதியிலும் கழக அம்மா பேரவை சார்பில் பிரமாண்டமான கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது வாசலில் இரட்டைஇலை கோலமிட்டும் வீதியெங்கும் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் கோலங்களிட்டும் தங்களது திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தினார்கள்.இதையடுத்து கோலப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும், சிறந்த முறையில் கோலமிட்ட சாதனையாளர்களுக்கும் பார்வையாளர்களாக பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுமென தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார்.இதையடுத்து அமைச்சரின் அறிவிப்பின்படி டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள சுப்புலாபுரம்,முத்துலிங்காபுரம், சின்னாரெட்டிபட்டி,பெரியபூலாம்பட்டி,சின்னபூலாம்பட்டி,சிலார்பட்டி,கோபிநாக்கன்பட்டி,முருகனேரி,சின்னலொட்டி,சிட்டுலொட்டுபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டிகளில் பங்ககேற்றவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும்,சிறப்பாக கோலமிட்டவர்களுக்கும் சிறப்பு பரிசாக அழகிய சில்வர் பாத்திரங்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான ஈராண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக கிராமங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கியஅணி செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,மாவட்;ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாணிக்கம்,கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,தர்மர்,பாஸ்கரன், சாமிநாதன்,மாசாணம், பிச்சைகணி,தங்கராஜ்,செல்வமணிசெல்லச்சாமி,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன், நாகலட்சுமி,மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து