முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: ராமநாதபுரத்தில் நடிகர் கமலஹாசன் போட்டி? ஆதரவாளர்கள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி, -இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம்  கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் போட்டியிடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர் நடிகர் கமலஹாசன் என்று பலரும் கூறி வரும் நிலையில் அவரின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள கொத்தங்குளம் கிராமமாகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டு கமலஹாசன் கட்சியை தொடங்கினார். கட்சியின் ஒரு  வருட விழாவும் திருநெல்வேலியில் நடைபெற்றன.
  இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர்  வரும் பாராளுமன்றத்தேர்தலை தனித்து சந்திக்க உள்ளனர். கட்சியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் கமல் தொண்டர்களும் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர்.  கட்சியின் நிர்வாகிகள் மற்ற மாவட்டங்களில் போட்டியிட்டாலும் நடிகர் கமலஹாசன் தனது சொந்த தொகுதியான ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் பாராளுமன்றத்தேர்தலில் ராநாதபுரம் மாவட்டம் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பிரச்சாரம் செய்யக்கூடிய தொகுதியாக இருக்கலாம் என அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து