முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

726 வனக்காப்பாளர்கள் மற்றும் 59 வனத்துறை ஓட்டுனர்களுக்கு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு வனத்துறையில் 726 வனக்காப்பாளர்கள் மற்றும் 59 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு வனத்துறையில் சீருடைப் பணியாளர்களாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர் ஆகிய பதவிகளில் ஏற்படும் நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அளவில் தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் ஏற்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு வனத்துறை, அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு தேயிலைத்தோட்டக் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தில் காலியாக உள்ள வனவர் வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஏற்படுத்த 29.6.2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, முதன்முறையாக 2017-ம் ஆண்டு, தமிழ்நாடு வனத்துறை, அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகத்தில் உள்ள வனவர், கள உதவியாளர்பணியிடங்களுக்கு 181 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வனத்துறையில் காலியாகவுள்ள வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு வனத்துறையில் முதல்முறையாக இணைய வழித்தேர்வு 10.12.2018 மற்றும் 11.12.2018 ஆகிய நாட்களில் 30 மாவட்டங்களில் 140 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக இப்பணியிடங்களுக்கான நடைத்தேர்வு / உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், தேந்வு நடைபெற்ற இரண்டரை மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட விங்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு வனத்துறையில் 726 வனக்காப்பாளர்கள் மற்றும் 59 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக,முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நபர்களுக்குபணிஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) மல்லேசப்பா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் அப்பாஸ், வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவர் விஜயந்திரசிங் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து