முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் - முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, சாந்தோமில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உணவுகளை பரிமாறினார்.

400 உணவகங்களில்...

சென்னையில் பணிபுரியும் பதிவு பெற்ற கட்டிடத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு விரைவில் துவக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.  அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 43,631  கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 400 அம்மா உணவகங்களில் (அரசு மருத்துவமனைகளில் உள்ள அம்மா உணவகங்கள் நீங்கலாக)  விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை சென்னை, சாந்தோமில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உணவுகளை  வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள்...

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், இரா. காமராஜ், சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், டாக்டர் நிலோபர் கபில்,  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், தொழிலாளர் ஆணையர் முனைவர் டாக்டர் இரா. நந்தகோபால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து