முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : நாக்பூரில் நேற்று தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

* 116 ரன்கள் குவித்த விராட் கோலி சர்வதேச போட்டிகளில் கேப்டனாக 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிரேம் ஸ்மித் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), எம்எஸ் டோனி (இந்தியா), ஆலன் பார்டர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். தற்போது விராட் கோலி 6-வது வீரராக இச்சாதனையை படைத்துள்ளார்.
* கேப்டனாக 9 ஆயிரம் ரன்களை விரைவாக அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 204 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலி 159 இன்னிங்சில் கடந்துள்ளார்.
* நாக்பூர் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 325 ரன்கள் அடித்துள்ளார். டோனி 268 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

* ஒருநாள் போட்டியில் 40 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் உடன் இணைந்துள்ளார்.

* நேற்றைய போட்டியில் 10 பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சேவாக், சச்சின் தெண்டுல்கர், கங்குலி ஆகியோரும் 1000 பவுண்டரிகளுக்கு மேல் அடித்துள்ளனர்.
* சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 18 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 20 சதங்கள் அடித்துள்ளார்.
* ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 65 சதங்கள் அடித்துள்ளார்.

* இந்த சதம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மூன்று நாடுகளுக்கு எதிராக 7 சதங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிராக 8 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 7 சதங்களும் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து