முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வா? பி.சி.சி.ஐ பதில்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலக கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது.

23-ம் தேதி தொடக்கம்...

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும்.

ஓய்வு அளிக்க...

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்தப் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டி முடிந்த 2 வாரத்தில் உலககோப்பை நடக்கிறது. இதனால் பல நாடுகள் தங்கள் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் கும்ப்ளே கூறும்போது, “ஐ.பி.எல். போட்டியில் வேகப்பந்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு உலககோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பு தகுந்த ஓய்வு தேவை” என்று தெரிவித்து இருந்தார்.

சுமையாக இருக்காது

இதற்கு டோனி பதில் அளிக்கும் போது, “ஐ.பி.எல்.லில் 4 ஓவர் தான் வீச வேண்டி இருக்கும். இதனால் அது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. மேலும் ஐ.பி.எல். போட்டியின் அட்டவணையும் சரியான ஓய்வு கால இடைவெளியுடன் தான் உள்ளது. ஆகவே பந்துவீச்சாளர்கள் தகுந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். 4 ஓவர் வீசும்போது பவுலர்களால் சிறப்பாக பந்துவீச முடியும் என்றார்.

சம்மந்தமில்லை...

இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி உலக கோப்பையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் ஐ.பி.எல். போட்டிக்கும், உலககோப்பை இந்திய அணி தேர்வுக்கும் சம்மந்தமில்லை. ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல்.லில் சிறப்பாக ஆடவில்லையென்றால் அது அவர்கள் உலக கோப்பைக்கான வாய்ப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என்றார்.

இந்த நிலையில் உலக கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிப்பது குறித்து தேர்வு குழு முடிவு செய்யும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐயின் தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியதாவது:-

தேர்வு குழு முடிவு...

உலக கோப்பையில் ஆடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் ஓய்வு அளிப்பது குறித்து தேர்வு குழு முடிவு எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களின் கருத்தும் கேட்கப்படும். ஏனெனில் இந்த வீரர்களை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்களின் கருத்து முக்கியமானது.அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடமும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து