முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் குறித்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக் கொண்ட அட்டர்னி ஜெனரல் அந்த ஆவணங்கள் கிளாசிபைடு ஆவணங்கள், ரகசிய ஆவணங்களாகும் ஆகவே அவற்றை வெளியிடுவது அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறுவதாகும். ஆகவே அந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுபவர்கள் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள், மேலும் நீதிமன்ற அவமதிப்பும் இதில் அடங்கும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். நேற்று நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள ரபேல் ஒப்பந்தம் பற்றிய கட்டுரை சுப்ரீம் கோர்ட் விசாரணையின் மீது செல்வாக்கு செலுத்துவதாகும் அதுவே நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து