முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதவி காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை - சென்னை ஐகோர்ட்டில் ஆணையம் விளக்கம்

புதன்கிழமை, 6 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு பதவிக்காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று  சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மனுவை பரிசீலிக்க கோரிக்கை

புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலுவை இடமாற்றம் செய்யக் கோரி அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாங்கம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015 முதல் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள கந்தவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

விளக்கம்

தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணைய விதிகளின்படி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதவிக்காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், சில மாநிலங்களுல் ஏழு ஆண்டுகள் வரை தலைமை தேர்தல் அதிகாரிகள் பணியாற்றியுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டும் தான் எனவும் தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பரிசீலித்து ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து